கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு!

இலங்கையில் மேலும் 13 கொரோனா வைரஸ் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது.கொழும்பு – வாழைத்தோட்டம் தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்தே இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.அதேவேளை, மேலும் ஐவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 158 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், 122 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.