இலங்கையில் மேலும் 459 பேருக்கு கொரோனா தொற்று..!!

நாட்டில் நேற்று 459 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் பதிவான மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,967 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட 458 பேரும், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.நேற்று 465 பேர் குணமடைந்த வைத்தியசாலைகளிலிருந்த வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,962 ஆக உயர்ந்தது.56 மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 5,911 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 601 நபர்கள் தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.