யாழ்ப்பாணம் நல்லூரில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா! எழுந்துள்ள அச்சம்!!

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


கோயில் வீதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த 11ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து வருகை தந்த அவர் கிளிநொச்சிக்கும் வான் ஒன்றில் சென்று வந்துள்ளார்.அவர் கொழும்பிலிருந்து வருகை தந்தமை அறிவிக்கப்படாத நிலையில் கடந்த 15ஆம் திகதி சுகாதாரத் துறையினர் கண்டறிந்து அவரைத் சுய தனிமைப்படுத்தினார்கள்.
அவருடன் வீட்டில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.வயோதிபப் பெண்ணுடன் வீட்டில் இருவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் அடுத்து வரும் நாள்களில் முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.