இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுபவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி.!! புதிதாக அறிமுகமாகியுள்ள நடைமுறை.!!

எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வேண்டியிருந்தது. முதல் வேலையாக மருத்துவச் சான்றிதழ் தானே.

ஒரு நாள் தேவைப்படும். வரிசையில் கால் வலிக்க நிற்க வேண்டும். அப்படித் தான் எண்ணிக் கொண்டு நேரடியாகச் செல்லும் முன்,சென்ற வெள்ளிக்கிழமை தேசியப் போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் இணையத்தளத்தை (https://ntmi.lk/index.php?lang=en)  விபரங்களுக்காக பார்த்தேன்.அப்போதுதான் அந்த இணையத்தளத்தின் ஒரு மூலையில்  NTMI-e-channeling(https://echannelling.com/Echannelling/ntmi-channel) இற்கான லிங்க் இருந்தது. கிளிக் பண்ணி பார்த்தேன்.செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இதற்கு வழமையான கட்டணத்திற்கு மேலதிகமாக 90/= அறவிடப்பட்டது.Phone இற்கு confirmation SMS வரும். அதன் பிறகு குறிப்பிட்ட இலக்கத்திற்குச் சென்று மருத்துவ சான்றிதழை மிகவும் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.இதனால், நாம் மட்டுமல்ல இது இலங்கைச் சாரதிகள் அனைவருக்கும் கிடைத்துள்ள இலகுவான நடைமுறையாகும்.ஆகவே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களுக்கு பயன்படாவிட்டாலும் இன்னும் ஒருவருக்கு பயன்பெறலாம்.ஆகவே இதனை அதிகம் பகிர்ந்து பிறருக்கும் உதவுங்கள்.தேசியப் போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் இத்தகைய புதிய முயற்சி இலங்கை மக்களுக்கு சிறந்த வரப்பிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை.