யாழ் போதனா வைத்தியசாலைக்கு மிகப் பெறுமதி மிக்க மருத்துவ உபகரணங்களை வழங்கிய தமிழர்..!!

புலம்பெயர் தேசத்தில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனவந்தரான திரு எஸ் கே நாதன் அவர்கள் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மிகப் பெரிய அன்பளிப்பை வழங்கியுள்ளார்.

வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கூடத்திற்கு தேவையான Video Laryngoscope இரண்டினை அண்மையில் வழங்கினர்.இவற்றின் பெறுமதி 3.5 மில்லியன் ரூபாய்கள் ஆகும்.இது தவிர கொரேனா தடுப்புக்கான தற்காப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கும் இதனோடு தொடர்புடைய செயற்பாடுகளுக்கும் அவர் அன்பளிப்பை வழங்கியுள்ளார்.திரு. நாதன் அவர்கள் வடபகுதியில் கடந்த பல வருடங்களாக பல உதவித் திட்டங்களை செய்து வருவது யாவரும் அறிந்த விடயமாகும்.
குறிப்பாக இக்காலப்பகுதியில் பல்லாயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருவதை யாவரும் நன்கு அறிவார்கள்.அவருடைய சேவையை பாராட்டுவதில் யாழ் வைத்தியசாலை சமூகமும் பெருமை கொள்கின்றது.

முகநூல்: வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியர்த்தி