2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள்!! வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்!!

இத்தாலியின் பொம்பீ பகுதியிலுள்ள சுமார் 2,000 வருடங்களின் முன்னர் வெசுவியஸ் மலையில் எரிமலை குழம்புகள் வெடித்துச் சிதறியதில் கொல்லப்பட்ட இருவரின் சடலங்களை தொல்லியலாளர்கள் மீட்டுள்ளனர். ஒரு இளம் அடிமையினதும், சுமார் 40 வயதுகள் மதிக்கத்தக்க பணக்கார எஜமானினதும் சடலங்களாக அவை இருக்கலாமென தொல்லியலாளர்கள் நம்புகிறார்கள். அவர்களின் ஆடைகள் உள்ள இடங்கள் மற்றும் உடல் தோற்றத்தின் அடிப்படையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கி.பி 79 இல் வெசுவியஸ் மலையில் எரிமலை குழம்புகள் வெடித்ததால், பொம்பீ நகரம் சாம்பலில் மூழ்கி பேரழிவிற்குள்ளானது. அந்த நகரம் முற்றாக அழிந்தது. தற்போது இத்தாலியின் இரண்டாவது பெரிய சுற்றுலா மையமாக பொம்பி மாறியுள்ளது. ரோம் கொலோசியத்திற்குப் பிறகு இத்தாலியின் அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடம் அதுதான். கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 4 மில்லியன் சுற்றுலா பயணிகள் அங்கு வந்திருந்தனர்.110 ஏக்கர் ரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான தளம் ரோமானிய பேரரசின் பணக்கார நகரங்களில் ஒன்றாகும். எரிமலை வெடிப்பினால் அந்த நகரத்தின் மீது தீப்பிளம்பும், சாம்பலும் விழுந்து நகரத்தை முற்றாக அழைத்தது. கட்டிடங்களும், மனிதர்களும் சாம்பல் மேட்டால் மூடப்பட்டனர்.சமீபத்திய மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், எலும்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பிளாஸ்டர் ஊற்றப்பட்டது. எச்சங்களை பாதுகாக்க, 1867 இல் கியூசெப் பியோரெல்லி கண்டுபிடித்த ஒரு நுட்பம் இதுவாகும்.பொம்பீக்கு வடமேற்கே 700 மீட்டர் தொலைவில் சிவிடா கியுலியானாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது ,இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நேப்பிள்ஸ் விரிகுடாவிற்கு அண்மித்த பண்டைய குடியிருப்பு ஒன்றிலேயே சடலங்கள் மீட்கப்பட்டன. மூன்று குதிரைகளின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.இரண்டு சடலங்களும் பெரிய குடியிருப்பொன்றின் பக்க அறையில் கண்டெடுக்கப்பட்டன. அருகில் நடைபாதையிருந்தது. அவர்கள் அனர்த்தத்தில் இருந்து தப்பிக்க தங்குமிடம் தேடி அங்கு சென்றிருக்கலாமென கருதப்படுகிறது.