வளர்ப்பு நாய் மரணம்..கதறித்துடிக்கும் குடும்ப உறுப்பினர்கள்..இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இறுதிச் சடங்கு.!!

வளர்த்த நாய் இறந்த நிலையில், இறந்த மனிதர்களுக்கு கொடுக்கும் இறுதி மரியாதையை போல் இறந்த நாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்லமாக வளர்த்த தனது நாய் இறந்ததையிட்டு உணர்வுபூர்வமாக இறுதி அஞ்சலி நிகழ்வை நிகழ்த்தி கதறியழுது இலங்கைப் பெண் ஒருவர் இறுதி மரியாதை செய்துள்ளார். குறித்த சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.