பாதுகாவலருடன் இரகசிய உறவைப் பேணிய பட்டத்து இளவரசி..கோடிகளை வீசியெறிந்து இளவரசி கொடுத்த முக்கிய நிபந்தனை..!! அம்பலத்திற்கு வந்த சங்கதிகள்..!!

தனிப் பாதுகாவலர் உடனான உறவை மறைப்பதற்காக துபாய் இளவரசி ஹாயா 1.2 மில்லியன் (ரூ.12 கோடி இந்திய பெறுமதி) டாலர்களுக்கும் மேலாக செலவழித்திருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் – மகோடமுக்கும், அவரின் ஆறாவது மனைவியான இளவரசி ஹாயா பின்ட் அல் ஹுசைனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு உலகறிந்த ஒன்று. இதன் தொடர்ச்சியாக தன் கணவரிடமிருந்து விவகாரத்து வேண்டும் என வழக்கு தொடர்ந்த ஹாயா திடீர் தலைமறைவானது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில், ஹாயா தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன, இது தொடர்பில் விபரிக்கின்றது இந்த தொகுப்பு.ஜோர்டான் நாட்டை பிறப்பிடமாக கொண்ட ஹாயா, தஞ்சம் புகுந்தது லண்டனில். அங்குதான் தற்போது தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் ஹாயா தனது கணவர் துபாய் மன்னர் ஷேக் முகமதுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.ஷேக் முகமதுவால், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது என்றும், தன் 11 வயது மகளை சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு திருமணம் செய்துவைக்க ஷேக் முயல்கிறார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.இந்த வழக்கில் ஹாயாவுக்கு ஆதராகவே தீர்ப்பு வந்தது. இதற்கிடையே, இந்தக் காலகட்டத்தில் இளவரசி ஹாயா தனது தனிப் பாதுகாவலர் ஒருவருடன் உறவில் இருந்தது தெரியவந்துள்ளதாக ‘டெய்லி மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது.அந்தக் காவலர் பெயர் ரஸ்ஸல் ஃபிளவர். 2018-ல் துபாயில் இருந்து இளவரசி ஹாயா வெளியேறினாலும், 2016-ல் இருந்து ஹாயாவுக்கு தனிப் பாதுகாவலராக ரஸ்ஸல் இருந்து வந்துள்ளார்.இளவரசி ஆஃப் வேல்ஸ் ராயல் ரெஜிமென்ட்டில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய ரஸ்ஸல் 2016-ல் இருந்து ஹாயாவுக்கு முழுநேரப் பாதுகாவலராக இருந்து வருகிறார். அப்போது இருந்தே இருவருக்கும் பழக்கம் ஏற்பட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.ரஸ்ஸல் தனது மனைவிக்கு தெரியாமல் ஹாயா உடன் உறவில் இருந்துள்ளார். இவர்களின் இருவர் விவரம் தெரியவர ரஸ்ஸல் மனைவி அவரை விவாகரத்து பெற்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.இதற்கிடையே, தன்னுடன் உறவில் இருந்ததை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக ரஸ்ஸலுக்கு கோடிகளை இரைத்துள்ளார் என்கிறது இங்கிலாந்து ஊடகமான ‘டெய்லி மெயில்’. ரூ.11.85 கோடி (இந்திய பெறுமதி) அளவில் பணம், பரிசுப்பொருட்களை கொடுத்துள்ளார் ஹாயா. ரஸ்ஸல் உடன் பணியாற்றிய காவலர்கள் இந்தத் தகவல்களை டெய்லி மெயில் உடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.அதில், “பிரிட்டனைச் சேர்ந்த 37 வயதான காவலர் ரஸ்ஸல் ஃப்ளேவருடன் 46 வயதான இளவரசி ஹாயா இரண்டு வருட உறவில் இருந்துள்ளார். இதற்காக ஹாயா, ரஸ்ஸலுக்கு கோடிக்கணக்கில் பணம், 12 லட்சம் மதிப்புள்ள கடிகாரம் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கி போன்ற பரிசுப்பொருட்களை கொடுத்து இருக்கிறார்.

மேலும் ‘RU55ELLS’ என்ற வார்த்தையுடன் தனிப்பயனாக்கப்பட்ட நம்பர் பிளேட் கொண்ட கார் ஒன்றையும் பரிசு அளித்துள்ளார். அவருக்கு மட்டுமல்ல, ரஸ்ஸலுடனான உறவைப் பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று ஹாயா மேலும் மூன்று காவலர்களுக்கு 1.2 மில்லியன் டாலர்கள் கொடுத்தார்” என்றும் ரஸ்ஸல் உடன் பணியாற்றியவர்கள் அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.இதனையடுத்து, இந்த சம்பவம்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.