சற்று முன்னர் பிணையில் விடுதலையானார் பிள்ளையான்.!!

சிறையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்றத்தால் குறித்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.மேலும், அவரோடு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐவரும் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி தெரிவித்த ஆட்சேபணைகளை நிராகரித்த நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்துள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிவநேசத்துரை சந்திரகாந்தன் சிறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.