யாழ் நகர சைவ உணவகம் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு.!! பணியாளர்களிற்கு வெளியில் செல்லத் தடை!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் மீட்கப்பட்ட உணவகத்தில் கடமையாற்றும், பணியாளர்கள் வெளியேறுவதற்கு பொலிஸாரால்தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸாரின் தீவிர கண்கானிப்புக்குள் உணவகம் கொண்டுவரப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர் என்ற அடிப்படையில், மாதிரிகள் எடுக்கப்பட்டு,பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.