வடக்கில் நேற்று நடந்த பிசீ ஆர் பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி.!!

யாழ். பரிசோதனைக் கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் வடக்கு மாகாணத்தில் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த விடயத்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது,

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 322 பேரின் மாதிரிகள் கொரோனாப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதில், நால்வருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும், முல்லைத்தீவில் விமானப் படையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருக்கும் 2 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.