கிளிநொச்சி முதியவருக்கு கொரோனா தொற்றியது எப்படி..? வெளிவந்துள்ள புதிய தகவல்..!!

கிளிநொச்சி, ஏ9 தொண்டமான் நகர் (வலர்லஸ் அடி) எரிபொருள் விற்பனை நிலையத்தில் அவர் பணியாற்றி வந்தவர்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 21ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்குச் சென்ற போது அவரது அறிகுறிகளின் அடிப்படையில் எழுந்த சந்தேகத்தால் அவர் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதிக்கு அனுப்பட்டுள்ளார். இருப்பினும், அதேநாள் நள்ளிரவில் வைத்தியர்கள் எவரும் பார்வையிடாமலேயே வைத்தியசாலையின் சாதாரண மருத்துவ விடுதியில் உள்ள தனிமைப்படுத்தும் அறைக்கு இவர் மாற்றப்பட்டுள்ளார்.மறுநாள் (22) பிசிஆர் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனையின் போது “முடிவெடுக்க முடியாத மாதிரி” என்று வந்த நிலையில் இவர் அதே சாதாரண மருத்துவ விடுதியின் தனிமைப்படுத்தும் அறையில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் நேற்று (23) இரண்டாவது தடவை பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.முதலாவது பிசிஆர் பிரிசோதனையின் போது “முடிவெடுக்க முடியாத மாதிரி” என முடிவு வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாவது தடவை செய்யப்படும்பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டே முடிவுகள் வெளிவந்துள்ளன எனக் வைத்தியசாலைப் பணியாளர்கள் கூறுகின்றனர்.இதனை அறிந்தும் தொற்றுக்குள்ளான நபரை தொடர்ந்தும் சாதாரண நோயாளர் விடுதியின் தனிமைப்படுத்தல் அறையிலேயே வைத்திருந்தமை மற்றும் நேற்று மதியமே குறித்த நபரை கண்காணிக்க உள்ளக பயிற்சி மருத்துவர் உள்ளிட்ட சிலரை வைத்தியசாலை நிர்வாகம் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருப்பினும் இதுவரை வைத்தியசாலைப் பணியாளர்களுக்கான தெளிவான தகவல்கள் எவையும் உரிய முறையில் தெரிவிக்கப்படாமை ஆகிய விடயங்கள் நிர்வாகம் குறித்து வைத்தியசாலை பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதேவேளை, அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. இது பெரும் அபாயத்தை ஏற்படுத்தவல்லது. சமூகத்தொற்றையும் ஏற்படுத்தக்கூடிய அபாயமுடையது. இதனால் உடனடியாக கிளிநொச்சியிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக நேற்று (23) இரவு வடக்கு ஆளுனரின் உத்தரவின்படி, வடக்கு கல்வியமைச்சு அறிவித்தது.அவருக்கு தொற்று ஏற்பட்ட வழியை உறுதியாக கூற முடியாவிட்டாலும், இரண்டு சாத்தியங்கள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.