உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அமெரிக்கா..கொரோனா தடுப்பூசியின் விலை விபரங்கள் அறிவிப்பு!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுக்கு முடிவு கட்ட உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கான விலையை அறிவித்துள்ளது மொடெர்னா நிறுவனம். கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் அமுல்படுத்தப்படும் பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இதிலிருந்து மீண்டு வர மேலும் சில ஆண்டுகள் ஆகும் என்றே கூறப்படுகிறது.இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டறிய சர்வதேச மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுக்க கொரோனாவுக்காக சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு நாட்டு தடுப்பூசிகள் பல்வேறு கட்ட சோதனையில் உள்ளன.இந்நிலையில், ஒவ்வொரு தடுப்பூசியும் எவ்வளவு திறனுடன் உள்ளன என்பது குறித்த தகவல் அண்மையில் வெளியானது.அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 90 வீத திறனுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ரஷ்யா சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 92 வீத திறனுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனையில் கொரோனாவை தடுப்பதில் 95 வீத திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த மொடெர்னா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 94.5 வீத திறனுடன் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மொடெர்னா நிறுவனம் தடுப்பூசியை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசியை ரூபாய் 1855 முதல் ரூபாய் 2,755 வரை (இந்திய மதிப்பில் ) விற்க உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.மொடெர்னா நிறுவனம் விலையை அறிவித்த நிலையில், ஏனைய நிறுவனங்களும் போட்டி போட்டு விலையை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.