சற்று முன்னர் கிடைத்த செய்தி..கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா.!! சிகிச்சைக்காக வெலிகந்தைக்கு மாற்றம்.!!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏ9 வீதியில் வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றிய ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கிளிநொச்சியை சேர்ந்தவர். அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை இன்னும் அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.அடையாளம் காணப்பட்ட கொரோனா கொத்தணிகளுடன் தொடர்பில்லாத ஒருவர் -கொரோனா இரண்டாம் அலையில்- வடக்கில் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.அவர் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார்.