கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 428 நோயாளிகள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு !!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 428 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 171 ஆக காணப்படுகின்றது.இதில் 5 ஆயிரத்து 587 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 462 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.மேலும், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.