இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஆயுள் தண்டனைக் கைதி..!!

மஹர சிறைச்சாலையின் கைதி ஒருவர் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தார்.

82 வயதான இவர் ஆயுள் தண்டனை கைதியாவார்.புற்றுநோய் மற்றும் பல நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர், பின்னர் ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.பிரேத பரிசோதனையில், பி.சி.ஆர். பரிசோதனையில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.