வாகன நெரிசல் மிக்க நேரத்தில் பேரூந்து சில்லுக்குள் நிலைதடுமாறி வீழ்ந்த காதல் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்.!! (பதற வைக்கும் சி.சி.ரி.வி காணொளி..)

கொழும்பு, ஹைலெவல் வீதியில் கடந்த 16 ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் இளம் காதல் ஜோடியொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். விபத்து தொடர்பாக சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் ஜோடி பணி முடிந்து மாலை 5.35 மணியளவில் வீடு திரும்பும்போது, ஹை லெவல் வீதி, விஜேராம சந்தி அருகே விபத்து இடம்பெற்றது.மோட்டார் சைக்கிளில் சென்ற ஜோடி, இ.போ.ச பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து நேர்ந்தது.வீதியின் நடுவிலுள்ள வெள்ளை குறியீட்டு அடையாளத்தின் மேலாக மோட்டார் சைக்கிளை செலுத்தும் போது, நிலைதடுமாறு இருவரும் மோட்டார் சைக்கிளுடன் பேருந்து சக்கரத்திற்குள் விழுந்தனர்.சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.திசால் ஷானக குமாரசிங்க (23) என்ற மத்துகமவை சேர்ந்த இளைஞனும், ஜெயசுந்தர கலணி கங்கா ரஜினி (22) என்ற லுனுவத்த, வெலிமடவை சேர்ந்த யுவதியுமே உயிரிழந்தனர்.