ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரணில் விக்கிரமசிங்கவிற்கு.!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(23) முற்பகல் குறித்த கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளை ஆராய்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை​ இராஜினாமா செய்வதற்கு முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் இன்று இடம்பெற்றபோதே அவர் தனது முடிவை அறிவித்துள்ளார்.மேலும், புதிய உறுப்பினர்களுக்கு வழிவிடும் எண்ணத்தில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இருப்பினும் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அகில விராஜ் காரியவசத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, கட்சியின் புதிய பதவிகள் தொடர்பில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.