பிறந்து 10 நாட்களேயாகிய குழந்தைக்கு ஏணைகட்ட முனைந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..!!

தனது குழந்தைக்கு ஏணை கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட இருட்டுமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.அதே இடத்தைச் சேர்ந்த இராமசாமி மோகன்ராஜ் (36 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;கடந்த 21ஆம் இதிகதி சனிக்கிழமையன்று குழந்தை பிறந்து பத்து நாட்களேயான குழந்தையினை தூங்க வைப்பதற்காக ஏணை ஒன்றினை கட்டுவதற்க முனைந்துள்ளார், இதன்போது கீழே தவறி வீழ்ந்து படுகாயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.எனினும், மேலதிக சிகிச்கைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நேற்றையதினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.