கொழும்பு வைத்தியசாலையில் இருந்து தப்பி செல்ல முயற்சித்த மற்றுமொரு கொரோனா நோயாளி.!!

கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து மற்றுமொரு நோயாளி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.எனினும் பாதுகாப்பு பிரிவினால் குறித்த நோயாளி சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.அவர் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாக இருந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.