உருவான புதிய புயலுக்கு வைக்கப்பட்ட பெயர் இதுதான்!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு புயலுக்கு “நிவர்” என பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு இன்னும் 24 மணி நேரத்தில் வலுபெற்றுவிடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த புயலுக்கு “நிவர்” என பெயரிடப்பட்டுள்ளது.இந்த நிவர் புயலால் வருகிற 23ம் திகதி தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.இந்தப் புயல் வருகிற 25ம் திகதி மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.