பொலிஸ் அதிகாரியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!! யாழில் அழகான முறையில் தயாராகும் கீரைப்பிட்டு.!! (வைரலாகும் காணொளி)

போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்திருந்தார். இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், ரைட் அப்கள், மீம்ஸ்கள் மூலமாக பிட்டு மற்றும் பீட்சாவை சம்மந்தப்படுத்தி நெட்டிசன்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் பெர்னாண்டோ மீதான தங்களுடைய விசனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் யாழ்ப்பாணத்தவர்களின் உணவு குறித்து தெரிவித்த கருத்துக்களுக்குகடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ள நிலையில், யாழில் வயோதிப மாது ஒருவர் மிகவும் தத்துரூபமான முறையில் யாழ்ப்பாணக் கீரைப்பிட்டு அவிக்கும் காணொளி வைரலாகி வருகின்றது. இந்த வேளையில் இந்த அழகிய காணொளி உங்கள் பார்வைக்காக இதோ..