சற்று முன்னர் கிடைத்த செய்தி..சாவகச்சேரியில் திடீரென வீழ்ந்து இறந்தவரின் பிசீஆர் முடிவு..!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்று திடீரென உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உயிரியல் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லையெனத் தெரிய வந்தது.

பளைப் பகுதியை சேர்ந்த 44 வயதான ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென விழுந்து உயிரிழந்தார்.அவர் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வருவதையும், அவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையும் மறைத்திருந்தார்.அதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையும் அசமந்தமாக செயற்பட்டு நோயாளி பற்றிய முழுமையான விபரத்தை பெறாமல் விடுதியில் அனுமதித்திருந்தது.இந்த நிலையில், அவர் உயிரிழந்ததை தொடர்ந்து இன்று காலையிலிருந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.பிசிஆர் முடிவின்படி அவருக்கு தொற்று இல்லையெனத் தெரிய வந்துள்ளது.