குளத்திற்குள் தவறி வீழ்ந்த இரு சிறுவர்கள் பரிதாபமாகப் பலி..!! யாழ் மண்டைதீவில் சோகம்..!!

யாழ்ப்பாணம் – மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் குளத்திற்குள் மூழ்கி இரு சிறுவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது 5 வயது மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சிறுவர்கள் தனது சித்தப்பாவுடன் வயலுக்கு சென்ற நிலையிலேயே, குளத்திற்குள் விழுந்து உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலம் மண்டைதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.