வடக்கில் இன்று நடந்த பிசீஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா..!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 10 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 8 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுதவிர, கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நேற்றைய தினம் திருவையாறு பகுதியில் சாவடைந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு பகுதியில் இருந்து வந்திருந்த குறித்த நபரின் மகளுக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டது.அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்.கண்டாவளை பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வந்து தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.