பிரதமர் மஹிந்தவுக்கு கிடைத்த மறக்க முடியாத அரிய பிறந்தநாள் பரிசு.!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது முதல் வாகனமான விண்டேஜ் மோட்டார் காரை பரிசாக பெற்றுள்ளார்.பிரதமரிடம் இருந்து பியட் 124 ஸ்போர்ட்ஸ் கூபே (FIAT 124 Sports Coopé) வாகனத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய குடும்பத்தினரால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

வாகனத்தை வாங்கிய எஸ். எ. அமரசிறி இந்தியாவில் நடைபெற்ற ஒரு மோட்டார் பேரணியில் வென்றுள்ளார், அதில் அவர் பியட் 124 ஸ்போர்ட்ஸ் கூபே உடன் பங்கேற்றுள்ளார்.இது இப்போது 50 ஆண்டு பழமையான விண்டேஜ் மோட்டார் காராகும்.75 ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் பிரதமரின் மகன் யோஷிதா ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய இன்று அதன் முதல் உரிமையாளரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமரசிறியின் மகனும் குடும்பத்தினரும் வாகனத்தை அனுப்பி வைத்துள்ளனர்.