பொருத்தமான தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவுதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.!! உடனடியாகப் பதிவு செய்ய வேண்டுகோள்.

தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவுதிகள், தமது பெயர்களை மாவட்ட செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொழில் கேந்திர நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பில் மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுலா கூறுகையில்,தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகளை, தனியார் துறைகளிலுள்ள தொழில் வெற்றிடங்களில் நியமிக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, தனியார் துறைகளில் தொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்து காத்திருப்போர், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.dome.gov.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.