கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க புதிய ஸ்பிரே அறிமுகம்..48 மணிநேரத்திற்கு தொற்றாதாம்!!

பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், புதுவகையான ஸ்பிரே(தெளிக்கும்) மருந்து ஒன்றை கண்டு பிடித்துள்ளார்கள். இதனை மனிதர்கள் பாவிக்கலாம் என்றும் பிரித்தானியா மற்றும் சர்வதேச சுகாதார நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திரவத்தை மூக்கில் அடித்துக் கொண்டால் 48 மணி நேரத்திற்கு(அதாவது 2 நாளைக்கு) கொரோனா தொற்று ஏற்படாது. இது மூக்கு வழியாக கொரோனா வைரஸ் செல்வதை உடனே தடை செய்து. கொரோனா வைரஸை அழித்து விடும்.ஆனால் உங்கள் கைகளில் வைரஸ் பட்டு, அது வாய் ஊடாக அல்லது கண்கள் ஊடாக உடலில் செல்வதை இது தடுக்காது என்கிறார்கள். இந்த ஸ்பிரே அடுத்த வாரத்தில் இருந்து, விற்பனைக்கு வர உள்ளது. எனவே காற்றில் பரவும் கொரோனா வைரஸுக்கும் தற்போது முற்றுப் புள்ளிவைக்கப்பட்டுள்ளது என்ற நல்ல செய்தி கிடைத்துள்ளது.