சிவாஜிலிங்கத்தை தீண்டிய புடையன் பாம்பு..!! அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண விடுதிக்கு மாற்றம்!!

பாம்புக்கடிக்கு இலக்கான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை தேறி வருகிறது. இதையடுத்து, அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண விடுதிக்கு இன்று காலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (20) இரவு பாம்புக்கடிக்கு இலக்கானார். இரவு 9.20 மணியளவில் அலுவலகத்தின் மலசலகூட கதவிலிருந்த புடையன் பாம்பு சிவாஜிலிங்கத்தின் கையில் தீண்டியது.இதையடுத்து வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் பாம்பு உயிருடன் பிடிக்கப்பட்டு போத்தலில் அடைக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.உடனடியாக, மேலதிக சிக்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த சிவாஜிலிங்கம், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று காலை சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.எனினும், அவர் தொடர்ந்து சோர்வாக காணப்படுகிறார்.