இலங்கையில் பதிவான மேலுமொரு கொரோனா மரணம்.!! நேற்று மட்டும் 439 கொரோனா தொற்றாளர்கள்!!

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. இதன்படி, நாட்டின் கொரோனா மரண எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு 2 ஐ சேர்ந்த 70 வயதான ஒருவர், தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இருதயம் தொடர்பான சிக்கல்களால் அவர் உயிரிழந்துள்ளார்.இதுதவிர, இன்று 439 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.