இலங்கை நாடாளுமன்ற உத்தியோகஸ்தர்களுடன் ஆற்றுக்குள் விழுந்த பேரூந்து..!!

நாடாளுமன்ற உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஒரு குளத்திற்குள் விழுந்து விபத்திற்குள்ளானது.

விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் கிட்டத்தட்ட 30 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். மதியம் பெய்த பலத்த மழையால், சாரதி சரியாக வீதியை கவனிக்காமல் விபத்துக்குள்ளானார். விபத்தினால் சிலருக்கு சிறு கீறல் காயங்கள் ஏற்பட்டன.இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், பாராளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள “டி” வளைவில் இந்த விபத்து நடந்ததாக கூறினார்.பேருந்து சாரதியும், நடத்துனரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.