லண்டனில் தண்ணீர் போத்தல் வாங்கி குடித்த தமிழருக்கு கொரோனா..!! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!!

லண்டனில் Mitcham உள்ள தமிழ் கடை ஒன்றுக்குச் சென்று, சிறிய போத்தல் ஈவியன் தண்ணீர் வாங்கி குடித்த தமிழர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக அவர் வெளியே செல்வதை பல மாதங்களாக தவிர்த்து வந்த நிலையில். அவருக்கு கொரோனா தொற்ற என்ன காரணம் என்று பார்த்தால்,அவர் காசை பயன்படுத்தியதே காரணம் என்று அறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் அறிமுகமாகியுள்ள பிளாஸ்டிக் தாழ் காசில், கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர் வாழ வல்லது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.எனவே காசை பயன்படுத்தி ஒரு பொருளை வாங்கி விட்டு. பின்னர் கடைக்காரர் தரும் மிகுதிக் காசை அப்படியே வாங்கி பாக்கெட்டில் போட்டு விட்டு. பின்னர் நீங்கள் உணவை உண்டாலோ, ஒரு றோல்ஸ் அல்லது வடையைக் கடித்தாலோ அது ஆபத்தான விடயம் தான். அது போல தான் தண்ணீர் போத்தல்களை திறக்கும் போதும் உங்கள் கைகள், அதன் வாய் பகுதியில் படுகிறது. பின்னர் நீங்கள் நீரைக் குடித்தால், கையில் உள்ள வைரஸ் அப்படியே உடலுக்குள் சென்றுவிடும்.எனவே காசைப் பாவித்தால் தமிழர்களே உடனே கைகளை கழுவுங்கள். தற்போதைய நிலவரப்படி காசு என்பது படு மோசமான ஒரு பொருளாக மாறியுள்ளது. ஆம் அது தான் உண்மை. காசை பாவித்தால் உடனே சனடைசர் போடுங்கள். தண்ணீரில் எந்த ஒரு குறையும் இல்லை. அதனை நாம் தான் அசுத்தம் செய்கிறோம். அது போல வாங்கும் பொருட்களில் பொதுவாக கொரோனா வைரஸ் இருப்பது இல்லை. நாம் கைகளால் தொட்டு, அல்லது கொரோனா வைரஸ் உள்ள நபர் அதனை தொட்டு அசுத்தம் செய்கிறார் என்பதே உண்மை. லண்டனில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே தமிழர்களே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

இது இவ்வாறு இருக்க பல தமிழ் இளைஞர்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் வந்து மாறிய விடையம் அவர்களுக்கே தெரியாது. இப்படி தான் ஒரு குடும்பம் எதேட்சையாக பி.சி.ஆர் பரிசோதனை செய்த வேளை. அவர்கள் பிள்ளைகளுக்கு கொரோனா வந்து மாறியுள்ள விடையத்தை தெரிந்து கொண்டுள்ளார்கள்.பலருக்கு காச்சல் கூட இருக்கவில்லை. ஆனால் அவர்கள் வைரஸ் கடத்தும் (காவி) நபர்களாக இருந்துள்ளார்கள். எனவே வீட்டில் வயதான பாட்டி, தாத்தா போன்றவர்கள் இருந்தால். பேரப் பிள்ளைகள் அவதானமாக இருப்பது நல்லது. அவர்கள் வயதானவர்களுக்கு கொரோனாவை தொற்றுக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.

நன்றி-Athirvu