மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தடை!! யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு..!

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தடைவிதிக்க கூடாதென கட்டளையிட கோரி தாக்கல் செய்த மனுக்களை யாழ் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரமென்பதால் மாவட்ட மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதால், வழக்கை விசாரணை செய்ய முடியாதென குறிப்பிட்டு மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் தள்ளுபடி செய்தார்.மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் சார்பில் வி.மணிவண்ணனும், வேறு 8 பேர் சார்பில் எம்.ஏ.சுமந்திரனும், மேலும் பல தமிழ் சட்டத்தரணிகளும் இந்த வழக்கில் முன்னிலையாகியிருந்தனர்.