கொரோனா வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய பெண்ணைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரல்!!

அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிசார் கோரியுள்ளனர்.எஹெலியகொடவை சேர்ந்த 25 வயதான ஜெயசிங்க முதியன்சலாவே ருவானி நிசன்சலா கருணாரத்ன என்பவரே தேடப்பட்டு வருகிறார்.

அவர் நேற்று இரவு தனது இரண்டரை வயது குழந்தையுடன் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். பேருந்தில் ஏறி, எஹெலியகொடவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு அவர் குழந்தையை விட்டுவிட்டு காணாமல் போயிருந்தார்.இன்று (20) காலை குழந்தையை பொலிசார் கண்டுபிடித்து, மீண்டும் வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.ஆனால், குழந்தையின் தாயார் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.தலைமறைவாக உள்ள பெண் பெரிய அளவில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டதாகவும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அவர் வைத்தியசாலையில் இருந்தபோது, ​​விரைவில் வெளியேற விரும்புவதாகக் கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிசார் கோரயுள்ளனர்.