வன்னிப் பிரதேசத்தில் திடீரென நிகழ்ந்த அதிசயம்..திடீரென நிறம் மாறிய கிணற்று நீர்.!! பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்.!

கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறிய அதிசயச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய சம்பவத்தை மக்கள் பலர் சென்று பார்வையிட்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பான மேலதிக விடயங்கள் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.