மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று..!! மொத்த எண்ணிக்கை 254 ஆக உயர்வு..!!

மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 3 பேருக்கும், ரம்புக்கனைப் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 244 இலிருந்து 248 ஆக அதிகரித்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 77 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய 164 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பின்னிணைப்பு:கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.அதற்கமைய இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 இலிருந்து 86 ஆக உயர்ந்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய 155 பேரும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அத்துடன், மேலும் 103 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.