கொடிய உயிர்க் கொல்லி வைரஸ் பரவலுக்கு முடிவு கட்டிய தேசம்..வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு..!!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் மக்கள் பல்வேறு அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர்.ஆனால், கொரோனாவை விடவும் வேறும் பல கொடிய நோய்கள் மக்களை அச்சுறுத்திவருகின்றன.

அந்த வகையில் கொங்கோ நாட்டில் கடந்த ஐந்து மாதங்களாக எபோலா தொற்று நோய் பரவி கொரோனாவுக்கு இடையே கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது.கொங்கோவில் எபோலாவால் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலான காலப்பகுதியில் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், கொங்கோவில் எபோலா தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.ஜூன் மாதத்தில் கொங்கோவில் எபோலா திடீரென பரவத் தொடங்கியது. அதன்பிறகு 119 பேருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும் கூடுதலாக 11 பேருக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.அதிகாரபூர்வமாக எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்ட 119 பேரில் 55 பேர் உயிரிழந்தனர். எபோலாவை கட்டுப்படுத்த பரவலாக தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி பயன்பாட்டால்தான் எபோலா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே கொங்கோவில் எபோலா பரவல் வெடித்தது. அதன்பின்னர் பல முறை நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொங்கோவில் எபோலாவால் 2,277 பேர் உயிரிழந்துள்ளனர்.