கொழும்பில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 157 கொரோனா தொற்றாளர்கள்.!!

கொழும்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 157 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் இன்றுவரை 6 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் 5667 பேர், களுத்துறை மாவட்டத்தில் 610 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை, நேற்றையதினம் 327 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனைடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.அவர்களில் 12 ஆயிரத்து 587 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 5 ஆயிரத்து 746 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.