கொரோனாவில் குணமடைந்து PCR செய்யாமல் வீடு திரும்பியவருக்கு மீண்டும் தொற்று!!

ஹொரண சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவில் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் வெளிநாட்டில் இருந்து வந்த நபரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.வெளிநாட்டில் இருந்த வந்த நபர் கடந்த மாதம் 13ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.கடந்த மாதம் 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியது.பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 14 நாட்களில் பின்னர் PCR பரிசோதனையின்றி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.4 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது