வவுனியா கல்வி வலயத்தில் நடந்த மிகப் பெரிய பண மோசடி.!! கிடப்பில் போடப்பட்ட விசாரணை..!! தப்பிக்கப் போகும் மோசடிக்காரர்கள்..!!

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற ஒரு கோடி 90 லட்சம் ரூபாய் மோசடி சம்பவம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் முகாமைத்துவ உதவியாளராக நியமனம் பெற்ற நிலையில் கல்வித் திணைக்களத்தின் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டபோது சம்பளத்தின் உண்மைப் பெறுமதியை உரியவர்களின் கணக்கில் வைப்புச் செய்தபோதும் மேலதிகமாக கணக்கிட்ட தொகையினை வங்கியின் ஊடாக தனது கணக்கில் வைப்புச் செய்து மோசடியில் ஈடுபட்டார். இந்த மோசடியில் ஈடுபட்ட ஊழியர் மேற்கொண்ட கணக்கு நடவடிக்கைகள் யாவும் மீளாய்விற்கு உட்படுத்தும் பணி துரிதமாக இடம்பெற்றது.இதன்படி இன்றுவரை கண்டு பிடுக்க்பட்ட பெறுமதி ஒரு கோடியே 90 லட்சம் ரூபா என பொலிஸாருக்கு அறிக்கை சமரட்பிக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் , பணிப்பாளர் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சமர்ப்பித்த வாக்குமூல நடவடிக்கையுடன் விடயம் உள்ளபோதும் மோசடியில் ஈடுபட்டவர் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்நிலையில், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் இவ் விடயம் தொடர்பில் திணைக்கள ரீதியாக ஐவர் அடங்கிய ஓர் குழுவை விசாரசைக்காக நியிமித்தார். அந்த குழு நேற்று முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.