சற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையில் கொரோனா தொற்றினால் பலியானோரின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு..!!

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொவிட் போன்றவற்றினால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமகம வைத்தியசாலையில் கொவிட்டிற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் கொவிட் என்பனவற்றினால் இந்த மரணம் சம்பவித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொவிட் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த தகவல்கள் அரசாங்கத் தகவல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.