விண்ணில் இருந்து வீட்டில் விழுந்த 4.3 பில்லியன் ஆண்டு பழமையான விண்கல்..!!

கொடுக்கும் தெய்வம் கூரையை பிரித்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள்.அதிஷ்டம் இருந்தால் எவரும் பணக்காரர் ஆகிவிடுவார்கள் என்பது உண்மை தான். இந்தோனேசியாவில் 33 வயதாகும் நபர் ஒருவரின் வீட்டில் பெரும் சத்ததோடு ஒரு விண் கல் வந்து விழுந்துள்ளது.அதனை அவர் சென்று தோண்டி எடுக்கையில் மிகவும் வெப்பமாக அது இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


2.1 KG எடை கொண்ட இந்த விண் கல், 4.3பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் என்றும். அது மிக மிக அரிதான கல். அது போக அதில் காணப்படும் தாதுக்கள் இன்றுவரை பூமியில் கண்டு பிடிக்கப்படாத ஒன்று. இதனால் அந்த கல்லின் 1 கிராம் எடை 1000 அமெரிக்க டாலர் ஆகும்.ஆனால், அந்த கல் 2.1KG எடை என்பதனால் அதன் விலை 1.4 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.இப்படி ஒன்று நடக்கும் என்றும் நான் கனவிலும் நினைக்கவில்லை என்று கூறுகிறார் அந்த நபர்.இதன் மூலம் ஒரே இரவில் இந்த நபர் மில்லேனியராகியுள்ளார். கூரையைப் பிரித்துக் கொண்டு கொடுப்பது என்பது இது தான்..