தொடர் சிக்கலில் LPL..கொழும்பு கிங்ஸ் பயிற்சியாளருக்கு கொரோனா!!

எல்பிஎல் தொடரில் ஆடும் கொழும்பு கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் கபீர் அலி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதனால், எல்பிஎல் தொடரிற்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொழும்பு கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக டேவ் வட்மோர் முன்னர் நியமிக்கப்பட்டார்.பின்னர், அவர் எல்பிஎல்லில் இருந்து விலகியதை தொடர்ந்து, இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபீர் அலி கொழும்பு கிங்ஸின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார்.கபீர் இப்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரும் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளது. அவர் அடுத்த சில நாட்களில் இலங்கை வரத் திட்டமிட்டிருந்தார்.