இலங்கையில் முதல்முறையாக 18, 000க் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.!!

நேற்று நாட்டில் 401 கொரோன தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டின் கெரோன தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,000 ஐ கடந்தது.அதன்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,075 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 398 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.ஏனைய மூவரும் வெளிநட்டிலிருந்து திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடலோடிகள்.
மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணி 14,568 ஆக அதிகரித்தது.தற்போது 5,799 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கொரோனா தொற்று சந்தேகத்தில் 516 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.12,210 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.