பேராசையால் வந்த விபரீதம்.! ஐ போன் வாங்கும் ஆசையில் கிட்னியை விற்று உயிருக்கு போராடும் இளைஞன்!!

ஐ போன் வாங்குவதற்காக தனது சிறுநீரகம் ஒன்றை விற்பனை செய்த இளைஞர் உயிருக்கு போராடிவருவதாக செய்தி வெளியாகியுள்ளது.சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த 25 வயதான வாங் ஷாங்கன் என்ற இளைஞரே இந்த விபரீதமான செயலில் ஈடுபட்டிருக்கிறார்.சிறு வயதிலிருந்தே ஐ போனை வாங்க வேண்டுமென்ற பெருங்கனவு அவருக்கு இருந்தபோதும் அதற்கான பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

அப்போது அவருக்கு அறிமுகமான சில கூடா நட்புகளால் ஆன்லைன் கள்ளச் சந்தையில் கிட்னியை வாங்கும் நண்பர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி தனது வலது கிட்னியை 3273 அமெரிக்க டாலர்களுக்கு விற்றுள்ளார்.அதை செய்த போது அவருக்கு 17 வயது. அறுவை சிகிச்சை மூலம் கிட்னியை பெற்றுள்ளனர். அந்த பணத்தில் வாங் ஐபாட் 2 மற்றும் ஐ போன் 4 வாங்கியுள்ளார்.’உயிர் வாழ ஒரு கிட்னி போதும்’ எனவும் வாங் சொல்லியிருந்தார்.சில தினங்களில் அவரது மற்றொரு கிட்னியும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. மகனின் உடல்நிலையை கவனித்த வாங்கின் தாயார் அவரிடம் விசாரித்ததில் விவரத்தை அறிந்து கொண்டுள்ளார்.பின்னர் இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வாங் தினந்தோறும் டயாலாசிஸ் செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற மோசமான நிலையில் உள்ளார்.