திடீர் விபத்தில் கை விரல்களை இழந்த போதும் தனது விடாமுயற்சியினால் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவன்..!! குவியும் பாராட்டுக்கள்..!

விபத்தில் வலது கைவிரல்களை இழந்த பின்னர், இடதுகைக்கு பழக்கப்படுத்தி புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் பற்றி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

புத்தளம் அநாகரிக தர்மபால ஆரம்ப பாடசாலையின் இந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 170 புள்ளிகளை பெற்றார்.புத்தளம்-கொழும்பு வீதியில், மதுரங்குள்- வஜிரவத்த பகுதியில் வசிக்கும் ஷெவன் சஞ்சீவ என்ற மாணவன், கடந்த ​​2017 ஆம் ஆண்டில் விபத்தை சந்தித்தார். தந்தையின் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட அரைக்கும் இயந்திரமொன்றில் கையை விட்டதால், வலது கைவிரல்களை இழந்திருந்தார்.வலது கை பழக்கமுடைய இந்த சிறுவன், வலது கைவிரல்களை இழந்ததால், வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் கல்வி செயற்பாட்டை முன்னனெடுக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால், கல்வியில் பின்னடைவை சந்தித்தார்.2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தரம் 4 இல் மாணவனின் ஆசிரியராக இருந்த பிரதீப் புஷ்பகுமார கூடுதல் கவனமெடுத்து, மாணவனை ஊக்கப்படுத்தியுள்ளார்.கொரொனா தொற்றின் ஆரம்ப கட்டங்களில் தனது வீட்டிலேயே மாணவனை தங்க வைத்து கவனித்துக் கொண்டுள்ளார்.