ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி ஏற்று, இன்று ஒரு வருடம் பூர்த்தியாகிறது.

கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்ட அவருக்கு 52.25 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெற்றன.நாட்டின் ஜனாதிபதியாக முதன்முறையாக தெரிவான அரசியல் செயற்பாட்டுடன் நேரடியாக தொடர்புபடாதவரும், முன்னாள் இராணுவ அதிகாரியாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளார்.2019 நொவம்பர் மாதம் 18ம் திகதி அவர் அனுராதபுரம் ருவன்வெலி மஹா விகாரைக்கு முன்னால் அவர் தமது பதவியை ஏற்றுக் கொண்டார்.இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றையதினம் நாட்டு மக்களுக்காக விசேட உரையை ஆற்றவுள்ளார்.இதன்படி இன்று இரவு 8.30க்கு இந்த உரை இடம்பெறவுள்ளது.இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளும் இன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.