நெஞ்சு வலியினால் உயிரிழந்த முதியவருடைய சடலம் பீ.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்.மட்டுவில் பகுதியில் நெஞ்சுவலியினால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிராம சேவகரால் பீ.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது.முதியவர் உயிரிழந்த சம்பவம் கிராம சேவகருக்கு தொியப்படுத்தப்பட்ட நிலையில், கிராமசேவகர் குறித்த நடவடிக்கையினை எடுத்துள்ளார்.
