தனது திடீர் செயற்பாட்டினால் சீனாவில் ஹீரோவாக மாறிய பிரித்தானிய அரசியல்வாதி.!!(வைரலாகும் காணொளி)

பிரித்தானியாவில் இருந்து சீனா சென்ற அரசியல்வாதி ஒருவர். அந் நாட்டில் பெரும் ஹீரோவாக மாறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் விடயமாக அவர் சீன சென்றவேளை, தனது வேலை முடிந்த பின்னர் ஆறு ஒன்றிக்கு அவர் சென்று பொழுதைப் போக்கிக் கொண்டு இருந்தவேளை, இந்த திடீர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கே நின்ற சீனப் பெண் ஒருவர், ஆற்றம் கரையில் உள்ள, கல்லில் சறுக்கி விழுந்து பின்னர் ஆற்றில் விழுந்து விட்டார்.இதனால், அவர் மயக்கமடைந்து நீரில் மூழ்க ஆரம்பித்தார். உடனே பிரிட்டன் நாட்டு அரசியல்வாதி ஆற்றில் குதித்து அவரை கரைக்கு இழுத்து வந்து காப்பாற்றியுள்ளார்.இந்த விடயத்தில் அருகில் நின்ற எவரும் நீரில் குதிக்க தயார் இல்லை. காரணம் அங்கே இருக்கும் முதலைகள் தானாம். ஆனால், நம்ம ஆளுக்கு அங்கே முதலை இருக்கும் விடையம் தெரியாது. உடனே குதித்து காப்பாற்றிவிட்டார்.