பேரறிஞர் அப்துல் கலாமின் வழியில் கனவை நனவாக்கிய தமிழ் மாணவி..!! தினமும் கொப்பியில் எழுதி வைத்து சட்டபீடத்திற்கு நுழையும் மாணவியின் உண்மைக் கதை.!!

வாழ்கையில் கனவு காணுங்கள் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறியதில் உண்மை இருக்கின்றது என நிரூபித்துள்ளார் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற உயர்தர மாணவி ஜி.வேதராகினி.

மாணவி ஜி.வேதராகினி தனது கல்லூரியில் கல்வி பயிலும் போது தான் ஒரு சட்டதரணியாக வர வேண்டும் என கனவு கண்டார். தான் கல்வி கற்றும் போதே தான் ஒரு சட்டதரணி என எண்ணிக் கொண்டார். தனது புத்தகங்களிலும் அப்பியாச கொப்பிகளிலும் தனது கனவு நனவாகும் என எழுதிக் கொண்டதோடு, தனக்கான சட்டத்தரணி முத்திரையும் பதித்துக் கொண்டார்.இதன் பயனாகவும் கனவின் நனவாகவும் அண்மையில் வெளி வந்த உயர்தர பெறுபேற்றில் சிறந்த பெறுபேற்றை பெற்று யாழ்ப்பாணம் பல்கலைகழக சட்ட பீடத்திற்கு தெரிவாகி உள்ளார்.கனவு காண்பது உங்கள் வாழ்க்கை மேன்மை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதற்கு இந்த மாணவியின் கனவு ஒர் சிறந்த உதாரணமாகும்.